மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் அதை செய்வோம், இதை செய்வோம் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பிரச்சாரமும் நாளை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. . இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துககளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் தமிழக மக்கள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விஸ்வ ஹிந்து பரிஷித்தில் உள்ள ஒரு தேசியவாதியாக தமிழகத்தின் தற்போதைய நிலையை நான் ஆய்வு செய்து பார்த்துள்ளேன். 

அதன்படி தமிழக மக்களே, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இந்த முறை ஓட்டு போடுங்கள். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள். ஆனால் தினகரனின் அமமுக கட்சிக்கு தேசிய ஒற்றுமை உணர்வு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஓட்டுபோடுமாறு பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.