* ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நபரின் திருமணத்தில் கலந்து கொண்டதை குற்றமாக சொல்லி மாவட்ட நிர்வாகிகளும் நீக்கம்! ரஜினியின் ஒப்புதலுடன், டாக்டர் இளவரசன் அதிரடி. ரசிகர்கள் குழப்பம், வேதனை.: செய்தி (மக்கழே இதுக்கே அசந்தா எப்டி? இது ச்சும்மா டிரெய்லர்தான். கட்சி ஆரம்பிச்ச பிறகு வர்ற பிளான்களை பார்த்தீங்கன்னா காலரா வந்து, பேதியாகி இந்த கண்டத்தை விட்டே ஓடிடுவீங்க.)

* நார்வே நாட்டில் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதி பொட்டு அம்மானின் உத்தரவின்படிதான் இலங்கை வவுணத்தீவு பாலம் அருகே இரண்டு சிங்கள போலீஸ்கார்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீண்டும் எழுகிறார்கள்! எனும் செய்தியால் ஒட்டுமொத்த இலங்கையும் நடுங்கிக் கிடக்கிறது: செய்தி. (பொட்டு அம்மான் பேரைச் சொன்னதுக்கே இந்த நடுங்கு நடுங்குறீங்களே, ‘அண்ணன் வந்துட்டேன்னு சொல்லு’ அப்படின்னு அவர் வந்து நின்னா நீங்கள்ளாம் உச்சா போயிட மாட்டீங்களாடா பச்சாஸ்?)

* தனுஷ் பட ரிலீஸுக்கு அனுமதி தர நாங்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யவில்லை. எல்லாம் வரிசைப்படிதான் நடக்கிறது. வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிடுவதெல்லாம் என்ன நாகரிகம்? எதைச்செய்தாலும் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது! என்று தனுஷ் டீமுக்கு விஷால் தரப்பு நிர்வாகிகள் பதிலடி: செய்தி. (எல்லாமே முறைப்படிதான் நடக்குதுங்ளா விஷால் ரெட்டி? அப்புறம் ஏன் செயற்குழு உறுப்பினருங்க கொத்தா ராஜினாமா பண்ணினாங்களாம்? உதயாட்ட கேட்டாலே உங்க நாகரிகத்தை புட்டுப் புட்டு வைப்பாரே?)

* கஜா களேபர களத்தில் மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் பேசிய ஆசிட் வார்த்தைகளால் மக்கள் கொதித்துக் கிடக்கின்றனர். இவர்களை சமாதானம் செய்வதற்காக பல நாட்களாக செங்கோட்டையனை அங்கேயே முகாமிட வைத்துவிட்டதாம் தலைமை. இதனால் செங்க்ஸ் செம்ம டென்ஸ்!ஸாம்: செய்தி. (விடுங்க தல, கடுப்போடு காத்திருப்பதும், காலம் வாய்ச்சா பாய்ஞ்சு பிறாண்டுவதும் நமக்கென்ன புதுசா?)

* அரசியல் ரீதியாக வடநாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமான ஒருவரை சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் தினகரன். அது தமிழக அரசியலில் சில பரபரப்புகளை உருவாக்கலாம் என்கிறார்கள்: செய்தி. (சூதானாமா நடந்துக்குங்க தினா. கோடிகளை கொடுத்து, கட்சி மாறச்சொல்லி  வற்புறுத்தி மன சஞ்சலத்தை உருவாக்குகிறார்!ன்னு புது கெட்-அப் வழக்கு ஒன்றை உருவாக்கி, உங்களை கொஞ்ச நாள் திகார்ல புல்லு வெட்ட வுட்டுறப்போறாய்ங்க!)