எடப்பாடி அரசை கவிழ்க்க தினகரன் விரும்பவில்லை!: புதுசு புதுசாய் கிளம்பும் விமர்சனம். 

தமிழக அரசியல் வரலாறு இதுவரையில் கண்டிரவே கண்டிராத வகையில்தான் கடந்த இரண்டு வருடங்களாக சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. யார் யாரது ஆதரவாளர்? யார் யாரின் எதிரி? என்று கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு கெக்கே பிக்கேவென கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள். 

டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி துவக்கியதும், அவர் அத்தனை தேர்தல்களிலும் செம்ம தில்லாக போட்டியிடுவதும் இந்த ஆட்சியை கவிழ்க்கத்தான்! என்பதே தமிழக எண்ணி வந்த விஷயம். ஆனால் ஸ்டாலினின் ஒரு நடவடிக்கைக்கு தினகரன் காட்டிய ரியாக்‌ஷனை வைத்து ‘இந்த ஆட்சியை கவிழ்க்க தினகரன் விரும்பவேயில்லை என்பது நிரூபணமாகிவிட்டது.’ என்று புது ரூட்டில் ஒரு விமர்சனத்தை கிளப்பிவிடுகிறார்கள். 

மிக முக்கிய அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி “சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்! என்று ஸ்டாலின் சொல்லி அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். இத்தனைக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திட ஆளுங்கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகத்தான் ஸ்டாலின் இந்த அரசியல் மூவ்வை எடுக்கிறார். 

நியாயப்படி இதற்காக ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டும் தினகரன். ஆனால் அப்படியில்லாமல், ‘ஸ்டாலினின் இந்த முயற்சி வெற்றி பெறாது. சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பும் முன்னரே இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். அவர் நோட்டீஸ் கொடுத்த பிறகு அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது செல்லாது.’ என்று கிண்டலடித்திருக்கிறார் தினகரன். இதன் மூலம் இந்த ஆட்சியை கவிழ்த்திட எந்த எண்ணமும் தினகரனிடம் இல்லை! என்பது தெளிவாகியிருக்கிறது.” என்கிறார்.

துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தே தீருவேன்! என்று தினகரன் கர்ஜித்ததெல்லாம் ச்சும்மா லுல்லூல்லாயிதானா? என்று இப்போது கேள்வி எழுந்திருக்கிறது.தினகரனின் இன்னொரு முகத்தை எக்ஸ்போஸ்  செய்துவிட்டதன் மூலம் ஸ்டாலின், தி.மு.க.வுடன் அ.ம.மு.க. திருட்டு நட்பில் இருக்கிறது! எனும் விமர்சனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார் என்கிறார்கள்.