dinakaran do not have political future

சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரட்டை இலை வழக்கின் விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது. அதற்காக டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:

இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் முடக்க சசிகலாவும் தினகரனும் போராடுகிறார்கள். சசிகலாவுக்கோ தினகரனுக்கோ அரசியலில் இனி எதிர்காலமே கிடையாது. எனவே திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அதன்மூலம் ஆதாயம் தேட தினகரன் முயற்சிக்கிறார். அதற்காகத்தான் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் முடக்கும் நோக்கில் தினகரன் செயல்படுகிறார்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவையும் தினகரனையும் விமர்சித்துப் பேசினார்.