நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்தாலும் அமமுக படு தோல்வி கொஞ்சம் ஷாக் தான், ஏனென்றால் சுமார் நான்கு தொகுதிகளை கைப்பற்றும், இந்த ஆட்சிக்கு ஆட்டத்தைக் காட்டும் என பல அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தது. 

கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு மெகா வெற்றியை கைப்பற்றினார். இதனையடுத்து எப்படியாவது அதிமுகவை ஆட்டையை போட்டுவிடலாம் என பிளான் போட்ட தினகரனின் பிளான் செல்ப் எடுக்காததால், தனது ஆதரவாளர்களுடன் புதிய காட்சியைத் தொடங்கினார். தினகரனின் இந்த அதிரடி முடிவால் அதிமுகவும் ஆடித்தான் போனது. தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் என செல்லும் இடமெல்லாம் கூட்டம் திமுக அதிமுகவுக்கு இணையாக  அலைமோதியது. ஏன் அதிமுக அமைச்சர்களின் பொதுக்கூட்டங்களுக்கே கூட்டம் இல்லாத நிலையில் தினகரனுக்கு கூடியது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றாலும் 22 தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுமார் 4 சீட் ஜெயிக்கும் என சொல்லப்பட்டது, ஆனால் போட்டியிட்ட தொகுதிகளில் மொத்தமாக படுதோல்வியை சந்தித்தது வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றியை தடுக்க முடிந்தது. 

இதனால், கடந்த சில நாட்களாக மனவுளைச்சலில் இருந்த தினகரன் செய்தியாளர்களை சந்தித்ததும் லோன் வாங்கி வெட்டிய தனது கிணத்தைக் காணோம் என சொல்லும் வடிவேலுவைப் போலவே, 300 பூத்தில் எனக்கு ஒரு ஒட்டு கூட விழல என  சமாளித்தார். 

இதே காரணத்தை சசிகலாவிடம் ஜெயிலுக்கு சென்று சொல்லிவிட்டு நேராக  தஞ்சாவூரில் நடக்கும் அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ரெங்கசாமி மகன் வினோபாரத் - அபிநயா திருமணத்துக்கு சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர்  தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்காக திருமண மண்டபம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு சென்ற தினகரன், பின்னர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நேராக நேற்று இரவே தஞ்சை வந்தார். 

இன்று காலை நடைபெற்ற கல்யாணத்தை நடத்திவைக்க வந்த அவருக்கு ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். அதேபோல, மேடையிலும், அரங்கத்திலும் கடும் கூட்டம் முண்டியடித்தது. இதைப் பார்த்த தினகரன், ரெங்கசாமியிடம், தேர்தலில் நமக்கு ஓட்டு விழவில்லை. ஆனால், கடுமையான கூட்டம் வந்திருக்கு. இவர்கள் ஒட்டு போட்டிருந்தால் நாம் தஞ்சையில் மட்டுமாவது ஜெயித்திருக்கலாம் என சிரித்துக்கொண்டே கமென்ட் அடிக்க ஒட்டுமொத்த குரூப்பே சிரிப்பால் அதிரவிட்டதாம்.