தேர்தலுக்காக செலவு செய்த வேட்பாளர்கள் கடனை அடைக்க முடியாமல் இருப்பதால் அதிமுக, திமுகவில் சேர தூது விடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22 சட்டப் பேரவை இடைத் தேர்தலில்  திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக,பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக வரும் என்று  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அக்கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்கவில்லை. ஆனால், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிக்கு இணையாக பணத்தை கொதிக்க கோடியாக வாரி இறைத்தது. 

இடைத்தேர்தல் நடந்த சில தொகுதிகளில் ஆளுங்கட்சி கொடுத்ததை விட அதிகமாக கொடுத்தது. என்ன செய்வது கொடுதும் பயனில்லை ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை.

இதையடுத்து, தேர்தல் ரிசல்ட் வந்த சில நாட்களிலேயே பேசிய   தினகரன், இந்தகட்சி தோற்றுப்  போனதால் முடங்கிவிட முடியாது என்றும், அமமுகவில் இருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம் என சொல்லி கட்சி நிர்வாகிகளை அதிரவைத்தார். தினகரனின் இந்த ஓபன் ஸ்டேட்மென்ட்டை தொடர்ந்து நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், தேர்தலுக்காக செலவு செய்த வேட்பாளர்கள் கடனை அடைக்க முடியாமல் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் தினகரன் கட்சி வேட்பாளர்கள் அதிமுக,திமுக கட்சிக்கு தாவ பிளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தது தினகரன் கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுக்கு பின்னர் தினகரன் கட்சியில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் சில வேட்பாளர்கள் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாறும் மனநிலையில் உள்ளதாக தெரிகிறது.