Dinakaran bail hearing postponed on 29th may

இரட்டை சிலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஜாமீன் கோரிய டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா மனு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினகரன், சுகேஷ் ஆகியோர் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். சுகேஷ் சந்திரா தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் அதிகாரி வராததால் விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டது. காவல்துறை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.