நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும்  படு தோல்வியை சந்தித்தது.  இந்த தோல்வியின் எதிரொலியாக அமமுகவிலிருந்து  முக்கிய நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன் தினகரனின் நம்பிக்கையாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவிற்கு தாவி, ஏற்கனவே இழந்த அரவக்குறிச்சியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல் .ஏ வாக ஆனார். இவரை தொடர்ந்து  தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அமமுக கட்சிக்கு அலுவலகம் கொடுத்த ஈசாக்கி சுப்பையாவும் விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இதனால் தினகரன் மனவுளைச்சலில் இருந்தார். 

இப்படி கட்சியில் குளறுபடி நீடிக்கவே நேற்று நடந்த சட்டமன்றத் கூட்டத்தொடரில் கூட பங்கேற்க்கமால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் தினகரன் பங்கேற்காதது குறித்து விசாரித்த போது, தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்து வருவதாலும் கடும் மனவருத்தத்தில் இருந்ததாக சொல்கின்றனர்.

இதற்கு முன்பு எதிர்கட்சிகளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தாலும் ஒத்த ஆளாக கெத்தாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் தந்து உரையை நிகழ்த்தினார். ஆனால் தற்போது சட்டசபை கூட்ட தொடரில் பங்கேற்காதது அக்கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.   

இந்நிலையில், தொண்டர்களை சோர்விலிருந்து மீட்க இன்று சிங்கிளாக  சட்டசபைக்கு வந்துள்ளார். அதிமுகவுக்கு மட்டுமல்லாமல் திமுகவுக்கே பெரும் அச்சுறுத்தலாக வலம் வந்த தினகரன் தற்போது டம்மியாக இருக்கிறார் என்று அரசியல் கட்சிகள் நினைத்தாலும், நான் எப்பவுமே கெத்துதான் என சொல்லும் விதமாக செம்ம கெத்தாக அசெம்பிளிக்குள் நுழைந்துள்ளார்.

இதில் சுவாரஷ்யம் என்னன்னா? தினகரனுக்காக பதவியை இழந்த செந்தில் பாலாஜி திமுகவில் இனைந்து மீண்டும் எம்.எல்.ஏவாக அசெம்பிளிக்குள் வந்துள்ளார். இவர்கள் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டதை அதிமுக மற்றும் திமுகவினர் கவனித்தனர். என்னதான் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டாலும் சின்ன புன்னகை கூட இல்லாமல் நகர்ந்து சென்றனர்.