திமுக, அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன். திமுக, அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகி விட்டது. மறைமுகமாக திமுகவுடன், தினகரன் கூட்டணி வைத்துள்ளார். 

தமிழகர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதையும் திமுக தான் தடுத்தது. திமுகவின் பழைய கதைகளை நோண்டினால், ஸ்டாலின் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது. மேலும் திமுக என்றாலே நாடக அரசியல் தான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தவறு நடக்கக்கூடாது. புதிது புதிதாக பிரதமர் வேட்பாளர்களை முளைக்கிறார்கள். ஆனால், மோடி மட்டுமே உழைக்கிறார் என்று தமிழிசை கூறினார்.