Asianet News TamilAsianet News Tamil

6 மாதங்களாக மறைத்து தில்லாலங்கடி... நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் முத்துசாமி..?

சந்திரசேகரும், சக்திவேலும் ஒரு வகையில் உறவினர்கள் என்கிற காரணத்தால் இத்தகைய செயலில் இறங்கியதாக கூறப்படுகிறது

Dillalangadi hidden for 6 months ... Will Minister Muthusamy take action ..?
Author
Tamil Nadu, First Published Jun 8, 2021, 6:55 PM IST

தமிழகத்தில் நில திட்டமிடல் மற்றும் வளர்ச்சியானது, நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர் ஊரமைப்பு இயக்கத்தின்கீழ் 1,28,869 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

நகர் ஊரமைப்புத்துறை திட்டக்குழுமங்கள் நகர் ஊரமைப்புச் சட்டம் மூலமே முழுமை திட்டம், புது நகர் வளர்ச்சி திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டங்களை தயாரிப்பதால் பணம் புழங்கும் துறைகளில் இது. முந்தைய அதிமுக ஆட்சியில் இந்தத் துறையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்தார். தற்போதைய திமுக ஆட்சியில் இந்தத் துறையை அமைச்சர் முத்துச்சாமி கவனித்து வருகிறார்.

 Dillalangadi hidden for 6 months ... Will Minister Muthusamy take action ..?

நகர் ஊரமைப்புத் துறையில் சென்னை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சூப்பர்வைசர் சந்திரசேகர். இவர் புரோக்கர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு செயல்பட்டார். இந்த அலுவலகத்தைப் பொறுத்தவரை புரோக்கார்களை கைக்குள் போட்டுக்கொண்டு தனது கட்டிப்பாட்டில் அனைத்தையும் வைத்திருந்தார் சந்திரசேகர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, விழுப்புரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு பணியிலிருந்து கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்டார் சந்திரசேகர். Dillalangadi hidden for 6 months ... Will Minister Muthusamy take action ..?

விழுப்புரம் மாவட்டத்தில் இவர் கடந்த 6 மாதகாலாமாக பணியில் இணையவில்லை என்ற விவரத்தை துணை இயக்குநர் சக்திவேல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு செல்லாமல் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சந்திரசேகரும், சக்திவேலும் ஒரு வகையில் உறவினர்கள் என்கிற காரணத்தால் இத்தகைய செயலில் இறங்கியதாக கூறப்படுகிறது. சூப்பர்வைசர் சந்திரசேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios