Asianet News TamilAsianet News Tamil

டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..!

மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Digital Timikki is the Tamil Nadu budget ... Former Minister Jayakumar's opinion
Author
Tamil Nadu, First Published Aug 13, 2021, 4:39 PM IST

மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.Digital Timikki is the Tamil Nadu budget ... Former Minister Jayakumar's opinion

காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்நிலையில் இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘’நிதிநிலை பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட். வாக்குறுதிகளை கொடுத்து வீட்டுக்கடன், கடன் என்கிறார்கள். யானைப்பசிக்கு சோளப்பொரி போல உள்ளது தமிழக பட்ஜெட்.

Digital Timikki is the Tamil Nadu budget ... Former Minister Jayakumar's opinion

பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்று தான் கூறுகிறார்கள். தெளிவான நிலை இல்லை. பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்து விட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது. வெள்ளை அறிக்கை வெளியிட்டது அவசியமில்லாதது. 2011ம் ஆண்டு கஜானாவை காலி செய்து விட்டு தான் திமுக ஆட்சி சென்றது. அந்தன் தாக்கம்தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீடித்தது.’’ எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios