Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவின் சிபாரிசால் மெடிக்கல் சீட் வாங்கினோமா..? மார்க் சீட்டை வெளியிட்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசில் கிருஷ்ணசாமி மகள் சங்கீதாவுக்கு மருத்துவ படிப்புக்கான இடத்தை வாங்கியதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது சகோதரியில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

Did we buy a medical seat on Jayalalithaas recommendation? Shyam Krishnasamy releases mark sheet
Author
Tamil Nadu, First Published Sep 2, 2020, 11:08 AM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசில் கிருஷ்ணசாமி மகள் சங்கீதாவுக்கு மருத்துவ படிப்புக்கான இடத்தை வாங்கியதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது சகோதரியில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார்.Did we buy a medical seat on Jayalalithaas recommendation? Shyam Krishnasamy releases mark sheet

இதுகுறித்து, ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அடிவருடிகள் கேட்பதற்காக எல்லாம் மார்க் சீட்டை காட்ட வேண்டுமா என்று நினைத்தேன்... சரி இதை காட்டினாலாவது முரசொலி வாசகர்கள் ‘அறிவோடு’ஏதாவது counter செய்வார்களா என்று பார்ப்போம்! பிகு- 2006 ஆண்டு வரை தமிழக அரசே மருத்துவ நுழைவு தேர்வு நடத்தியது’’ எனக் கூறி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  2002ம் ஆண்டு சங்கீதா பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய பதிப்பென் பட்டியலில் 1200 மதிப்பெண்ணுக்கு 1063 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். Did we buy a medical seat on Jayalalithaas recommendation? Shyam Krishnasamy releases mark sheet

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத சமூகவலைதளவாசிகள், ’’88% நல்ல மதிப்பெண். வாழ்த்துகள். மெரிட் மூலம் கிடைக்குமளவிற்கு இது நல்ல மதிப்பெண்ணா? கண்டிப்பாக இட ஒதுக்கீடு மூலமே கிடைத்திருக்கும். நீங்க இட ஒதுக்கீடு மூலம் படிச்சி முன்னேறுவீங்க, ஆனா உங்க சாதிசனம் முன்னேறக்கூடாது! முன்னேறினா அவங்கள வாக்குவங்கியா உபயோகிக்கமுடியாது. அவ்ளோதானே?

 

 2002ல் நான் phy- 193,che-195,bio-195 total-1131. ஆனபோதும் எனக்கு மெடிக்கல் கிடைக்கல. ஏன்னா அப்போ இருந்த entrance exam. வீட்ல இரூந்த கண்ணுக்குட்டிய வித்து தான் entrance fees கட்டினோம். இருந்தும் நுழைவுத்தேர்வில் குறைவால் எனக்கு சீட் கிடைக்கவில்லை என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios