ஏன் நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ளக்கூடாது என தனியார் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு " பார்ப்போம் சூழல் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்"  என திருமாவளவன் கூறுவது போன்ற பிரம்மோ ஒன்று வெளியாகியுள்ளது. 

ஏன் நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ளக்கூடாது என தனியார் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு " பார்ப்போம் சூழல் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்"  என திருமாவளவன் கூறுவது போன்ற பிரம்மோ ஒன்று வெளியாகியுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலரும் சபாஷ் திருமாவளவன் திருமணம் செய்துகொள்ளும் மூடுக்கு வந்து விட்டார் என்று கூறி வருகின்றனர்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கையில் உறுதியானவர் திருமாவளவன். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக இருந்து வருகிறார்.  கொண்ட கொள்கையில் உறுதி , நிமர்ந்த நெஞ்சம், நேர்கொண்ட பார்வை என அரசியலில் களமாடி வருபவர் திருமாவளவன். தலித் மக்கள்  விடுதலைக்காக தலித் மக்கள் அரசியலில் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழர்கள் தலை நிமிர வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் அவர். அதற்காக இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

நடந்து முடிந்த ஆகஸ்ட் 17 அன்று 60வது பிறந்த தினத்தை அவர் கொண்டாடியுள்ளார். அதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட எனது தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்லிக் கூட திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளவில்லை, கலைஞர் சொல்லி அவர் கேட்காத ஒன்று உண்டு என்றால் அது அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தான், ஒருவேளை 30 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவருடன் நண்பராக பழகி இருந்தால், நானே ஒரு பெண்ணைப் பார்த்து திருமாவளவனுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பேன், அது முடியாமல் போய்விட்டது என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மொத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் என்ற காட்சியையே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார், சிறுத்தை குட்டிகள்தான் அவரின் பிள்ளைகள் என ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் சத்தியம் தொலைக்காட்சியின் நெறியாளர்  முக்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளார். அதற்கான பிரமோ வெளியாகியுள்ளது. அதில் முக்தார் சில கேள்விகளை திருமாவளவனிடம் முன்வைத்துள்ளார். அதற்கு அவர் வெளிப்படையாக பதில் கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது,

அந்த பிரமோவில், நீங்கள் நடிகை மீனாவை விரும்பியதாக சொல்கிறார்களே? என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர், அவர் நடித்த ஒரே ஒரு படத்தைதான் நான் பார்த்திருக்கிறேன், ஏதோ தஞ்சாவூரு மண்ணெடுத்து என்று ஒரு பாடல் வருமே அந்தப் படம்தான்  என அவர் கூறுகிறார்.

பெண் பார்க்க சென்றிருக்கிறீர்களா என முக்தார் கேட்க, திருமாவளவனோ, அது என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை என பதில் கூறியுள்ளார். எல்லா விஷயத்திலும் பொதுநலவாதியாக இருந்தாலும் திருமண விஷயத்தில் மட்டும் ஏன் சுயநலவாதியாக இருக்கிறீர்கள், ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்ப,  அதற்கு அவர், என் தங்கை கூட என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூறினார் என தெரிவிக்கிறார்.

60 வயது ஆகிவிட்டது, இனியாவது முடிவு எடுங்கள் இல்லை என்றால் நீங்களே நினைத்தாலும் முடியாது என முக்தார் கூற, அதற்கு திருமாவளவன் அம்மாவின் வலி என்ன என்பது இப்போது எனக்கு புரிய தொடங்கியுள்ளது. அந்த வலியை நான் உணர ஆரம்பித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை பாருங்கள், அவருக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால் அவரை எப்படி கவனித்திருப்பார்கள், நீங்கள் ஏன் உங்களை கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை வைத்துக் கொள்ளக்கூடாது? என முக்தார் கேள்வி எழுப்ப, அதற்கு அவர், பார்ப்போம் சூழல் எப்படி போகிறது என்று பார்ப்போம் என திருமாவளவன் சன்னமாக பதிலளிக்கிறார். இப்படியாக அந்தப் பிரம்மே அமைந்துள்ளது. இந்த பிரம்மோ சமூக வளைதள்த்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்