* பாகிஸ்தானின் கார்ப்பசேவ் இம்ரான்கான் பதவி விலக வேண்டும். இதர்கு இரண்டு நாட்கள் கெடு விதிக்கிறோம். பாகிஸ்தானில் புதிய அரசு அமையும். பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமே ஆளும் உரிமை உள்ளது. எனவே வேறு எந்த அதிகார அமைப்பும் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கூட காண வேண்டாம். 
: பசலூர் ரஹ்மான் (தலைவர் - ஜாமியத் உலேமா - இ - இஸ்லாம் பாசல் அமைப்பு)

* பணிக்கு திரும்பிய அரசு டாக்டர்கள் அனைவருக்கும் முதல்வரின் சார்பாக நன்றி. போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டிருந்த போது அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணிமுறிவு உத்தரவு, திரும்பப் பெறப்படுகிறது. அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலிக்கும். 
- விஜயபாஸ்கர் (சுகாதாரத்துறை அமைச்சர்)

* பஞ்சமி நிலங்கள் தலித் பெயரில் மட்டும்தான் இருக்க முடியும். அதை தலித் அல்லாத வேறு ஒருவருக்கு மாற்ற முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பஞ்சமி நிலத்தை, பிறரிடம் இருந்து மீட்க முடியும். -திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி எம்.பி.)

* போராடிப்  பெற்ற மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல துறைகளை, பறித்துக் கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி எனும் ரீதியில் மத்தியரசு செயல்படுகிறது. - பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

* பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க மட்டும்தான் பார்லிமெண்டிற்கு வந்தார். அதன் பின் அவர் வரவேயில்லை. அவர் பதவியேற்ற பிறகு, எட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன அதில் எதிலுமே அவர் கலந்து கொள்ளவில்லை. - செந்தில்குமார் (தி.மு.க. எம்.பி.)

* சுற்றி இருக்கும் எந்த நோயும் நம்மை தாக்கக் கூடாது! என்று நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கிறோமோ அதே மாதிரிதான் இந்த பேரு, புகழு, வெட்டி பந்தா, இமேஜ், சுற்றி இருப்பவர்களின் புகழ் பேச்சு இதெல்லாமே நோய்தான். அவையும் நம்மை தாக்காமல் பாத்துக்கணும். நம்மை பிரிக்கிறதுக்கு ஏதேதோ நடக்குது. நாம்தான் ஒற்றுமையா இருக்கணும், ஜாக்கிரதையா இருக்கணும். - விஜய்சேதுபதி (நடிகர்)

* மாநிலத்தின் கவர்னரான எனக்கு எனது அதிகாரம் என்ன? நான் எந்தளவுக்கு செயலாற்ற முடியும்? என்பதெல்லாம் தெரியும் . நான் மக்களின் கவர்னர். அதனால் அரசியலில் ஈடுபட மாட்டேன். அதற்காக மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளான டெங்கு காய்ச்சல், போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம்! ஆகியவற்றை கண்டும் காணாமல் இருக்க முடியாது. - தமிழிசை (தெலங்கானா கவர்னர்)

* தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நான் மோட்டார் பைக்கில் சென்றபோது ஹெல்மெட் போடவில்லை என என் மீது வழக்கு போட கவர்னர் கிரன்பேடி சொல்கிறார். தேர்தல் விதிமுறைப்படி முகத்தை மூடியபடி ஹெல்மெட் அணிந்தபடி செல்லக்கூடாது. இதை அறியாத கிரண் பேடி, மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் பேய்! - நாராயணசாமி (புதுவை முதல்வர்)

* லோக்சபா தேர்தலில் மிட்டாய் கொடுத்து தி.மு.க. ஏமாற்றிவிட்டது என்று அ.தி.மு.க.வினர் கூறினர். இப்போது இரண்டு தேர்தலில் வென்றுள்ள அவர்கள் ‘அல்வா’ கொடுத்தார்களா? வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். அது நீடிக்காது. - மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

* சென்னை மெரீனாவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதாவுக்கு  நினைவிடம் அமைக்க 58 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அந்த நிதியில் ‘ஃபீனிக்ஸ்’ பறவை வடிவிலான நினைவிடம் கட்டப்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் கட்டுமான பணிகள் முழுமை பெறும். - பத்திரிக்கை செய்தி.