Dictatorship shadow follow on Active leader Stalin

ஜெயலலிதா இருக்கும்போதே ‘அ.தி.மு.க. தலைமையிடம் இருப்பது போல் நமது கட்சியிலும் சர்வாதிகாரம் வேண்டும்.’ என்று தி.மு.க.வின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியவர் ஸ்டாலின். இது மூத்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் கருணாநிதி வலுவாக இயங்கிய வரையில் தி.மு.க. தலைமையிடத்தில் சர்வாதிகாரம் எழவில்லை. ஆனால் கருணாநிதி உடல் சுகவீனத்தால் முடங்கி, ஸ்டாலின் செயல்தலைவர் அரிதாரத்தை பூசினார். இதன் பின் அக்கட்சியில் மெல்ல சர்வாதிகாரத்தின் சாயல் எட்டிப் பார்க்க துவங்கியிருக்கிறது என்கிறார்கள். 

நிர்வாகிகள் நியமனம், மாற்றம் போன்ற விஷயங்களில் அ.தி.மு.க. போல் சில அதிரடிகள் தி.மு.க.விலும் நடக்க துவங்கியிருக்கிறது என்கிறதாம். ஸ்டாலினின் நடத்தையிலும் ஒரு கெடுபிட் அதிரடி உருவாகியிருக்கிறதாம். இதற்கு உதாரணமாக சமீப நிகழ்வொன்றை சுட்டிக்காட்டுகிறார்கள். 
அதாவது கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கோவை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரிலேயே மதுரைக்கு வந்தார் ஸ்டாலின். இடையில் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் பயணியர் விடுதியில் அவர் மதிய உணவை எடுப்பது திட்டம். 

காங்கயத்தினுள் நுழையும் முன்னதாக சிவன்மலை நால்ரோட்டில் அவருக்கு வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடியிருந்தனர். பொதுவாக இப்படி தன் கட்சியினர் காத்திருக்கையில் அந்த இடத்தில் காரை விட்டு இறங்கி மரியாதையை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது ஸ்டாலினின் நெடுநாள் வழக்கம். ஆனால் சிவன்மலை நால்ரோட்டில் அவரிடம் பெரும் மாற்றம். காரை விட்டு இறங்காமல், கார் கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டு நிர்வாகிகளோடு பேசியிருக்கிறார். பின் சில நொடிகளில் கார் அங்கிருந்து விர்ர்ரென கிளம்பிவிட்டது. 

இது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘என்னய்யா இது!அந்தம்மா மாதிரி நம்ம தளபதியும் சர்வாதிகாரம் காட்ட ஆரம்பிச்சுட்டாரா?’ என்று சிலர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்துவிட்டனர். 

ஆனால் நிர்வாகிகளோ “நிச்சயமா இல்லை. அந்த மாதிரி சர்வாதிகாரமெல்லாம் தளபதிட்ட எந்த ஜென்மத்திலேயும் வராது. திருப்பூரை தாண்டி வந்துட்டிருந்தப்ப அவருக்கு சென்னையிலிருந்து ஒரு போன் கால் வந்துச்சாம். அதுல பேசுன பிறகு ரொம்பவே அப்செட்டாகவும், கோபமாகவும் ஆயிட்டாராம். கூடவே காலையில நிகழ்ச்சியில மணிக்கணக்கா கலந்துகிட்ட டயர்டு வேற!” என்று காரணம் சொல்லி ஆசுவாசப்படுத்தினராம். 

கட்சி கட்டுப்பாடா இருக்கணும்னா சர்வாதிகாரம் காட்டுறது தப்பே இல்லை!...என்கிற ஜெ., சித்தாந்தத்தை ஸ்டாலினும் ஃபாலோ பண்ண துவங்கிவிட்டாரோ?!