ஆனால், நடிகை கங்கனா ரனாவத் பலரின் கருத்துக்கு எதிராக ஒரு மாறுபட்ட கருத்தைக் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்து வகையில் அந்த பதிவு உள்ளது. 

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவரும் நிலையில், நடிகை கங்கனா ரணாவத் சர்வாதிகாரம் மட்டுமே தீர்வு.. இது சோகம், அவமானம் முற்றிலும் நியாயமற்றது என கருத்து பதிவிட்டுள்ளார். இது பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், 1947ம் ஆண்டு பெற்றது சுதந்திரம் அல்ல, அது பிச்சை, 2014ஆம் ஆண்டு தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது எனக் கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பலர் வரவேற்றும், பாராட்டி வரும் நிலையில், வழக்கம்போல கங்கனா ரணாவத் அதற்கு எதிர்மறையாக கருத்து கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விவசாய சட்டத்தை எதிர்த்து டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் எந்தவிதத்திலும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாது, மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த சட்டம் இருக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்து வந்தன. விவசாயிகள் இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்திய டாக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. அத்துமீறி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் கோட்டை கொத்தளத்தில் விவசாய கொடியை ஏற்றினர். அப்போது விவசாயிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான வெடித்த மோதல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகளுடன் அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை, இந்நிலையில் அடுத்த ஆண்டு பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர், விவசாயிகளின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகளின் உறுதியை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 3 விவசாய சட்டங்கள் ரத்து முடிவை பல்வேறு திரைத்துறையினர் வரவேற்றுள்ளனர். நடிகர்கள் சோனு சூட், ஊர்மிளா மடோன்கர், டாப்ஸி, ரிச்சா சதா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சோனு சூட் இது ஒரு அற்புதமான தகவல், பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல அமைதியாக போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு நன்றி என கூறியுள்ளார். நியாயமான கோரிக்கைகளை எழுப்பி வெற்றி பெற்றுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், நடிகை கங்கனா ரனாவத் பலரின் கருத்துக்கு எதிராக ஒரு மாறுபட்ட கருத்தைக் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்து வகையில் அந்த பதிவு உள்ளது.

இது "சோகமானது, அவமானகரமானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது," என்று அவர் கூறினார். "தெருவில் இருப்பவர்கள் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, அவர்கள் சட்டங்களை உருவாக்கத் தொடங்கினால், இதுவும் ஒரு ஜிஹாதி தேசம்தான்... இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்," என்று அவர் பதிவிட்டுள்ளார். கங்கனாவின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த காலங்களில், Ms பண்ணு, Ms சாதா, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், சோனம் கபூர் அஹுஜா, ப்ரீத்தி ஜிந்தா, ஸ்வரா பாஸ்கர், தில்ஜித் தோசன்ஜ், ரைத்தேஷ் தேஷ்முக், இயக்குனர் ஹன்சல் மேத்தா, ஹர்பஜன் மான், ஜஸ்பிர் ஜாஸ்ஸி போன்ற பல பிரபலங்கள் ஆதரவு அளித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவை தெரிவித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.