Dianakaran support MLAs! In the attempt to drag

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் தவிர மற்றவர்கள் தீர்ப்புக்குப் பிறகு தன் பக்கம் வந்துவிடுவார்கள் என்று ஆளும் எடப்பாடி தரப்பு கூறி வருகிறதாம். அவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகர் தனபாலின் உத்தரவை எதிர்த்து, தினகரன் ஆதவு எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு, தங்களுக்கு சாதகமாக அமையும் என தினகரன் தரப்பு கருதுகிறது. அதனால்தான், விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்று தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வருவதற்கே வாய்ப்பு அதிகம் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சொல்லப்பட்டதாம். எனவே, ஆட்சியை கவிழ்ப்பதைத் தடுக்க சில வழிகளை எடப்பாடி கையாண்டு வருகிறாராம். அதாவது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்புக்குப் பிறகு 5 பேர் தவிர மற்றவர்கள் தன் பக்கம் வந்துவிடுவார்கள் என அவர் நம்புகிறாராம்.

அதற்கான முயற்சிகளை எடப்பாடி தரப்பு துவங்கி விட்டதாம். ஏற்கனவே பதவி இல்லாமல், இத்தனை மாதங்களாக அனைத்து வசதிகளையும் இழந்து விட்டீர்கள். பழையபடி இந்த பக்கம் வந்தால், உரிய மரியாதை கிடைக்கும்; இல்லாவிட்டால், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதனால் மேலும் சில மாதங்கள் எதுவும் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று எடப்பாடி தரப்பு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் பேசி வருகின்றனராம். 

இந்த முயற்சி எடப்பாடிக்கு எந்த வகையில் பலனை கொடுக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதேவேளையில், தினகரனும் இதனை நன்கு உணர்ந்துள்ளாராம். அவர்களை தன்னுடைய வசம் வைத்துக்கொள்ளும் முயற்சியிலும் தினகரன் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.