தி.மு.க காரன் நன்றியுள்ளவன், அவன் உங்களையே சுற்றி சுற்றி வருவான். தெருநாய்கள் அல்ல டோய் என்றவுடன் ஓடி விடுவதற்கு... வீட்டு நாய் என் வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டில் உணர்ச்சி போங்க பேசியிருக்கிறார் துரைமுருகன்.

இந்நிலையில், வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த சுமார் 347 பேர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதற்கான விழா பேரணாம்பட்டில் நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்துகொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் முன்னிலையில் 347 பேர் கட்சியில் இணைந்தனர். 

அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு விசுவாசமானது என்று. அந்த நாயை எட்டி உதைத்தாலும் வளர்ப்பவனை விட்டு போகாது. அவனுக்கு நன்றியுடனே இருக்கும். அது போல தான் தி.மு.க காரன், வீட்டு நாயைப் போல விசுவாசமாக இருப்பான். மக்களாகிய நீங்கள் தான் எஜமானாக இருந்து தி.மு.க காரன் என்கிற நாயை வளர்த்தீர்கள். தி.மு.க காரன் நன்றியுள்ளவன், அவன் உங்களையே சுற்றி சுற்றி வருவான். தெருநாய்கள் அல்ல டோய் என்றவுடன் ஓடி விடுவதற்கு... வீட்டு நாய் என்றார்.

மேலும், பேசிய அவர், ஆளுங்கட்சியினர் கொள்ளையடித்து பணத்தை வைத்துள்ளனர் அவர்கள் நிறைய பணம் கொடுப்பார்கள்  அவர்கள் பெருமாள்  கோயில் பிரசாதங்கள் கொடுப்பது போல தழுவு சாதம், சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் என்று கொடுப்பார்கள். நாங்கள் விநாயகர் கோவில் போன்றவர்கள் சுண்டல் கொடுப்போம். ஆனால், கண்டிப்பாக கொடுப்போம் என்று சூசகமாக பணம் கொடுப்பதை குறிப்பிட்டார்.