வேலூர் நாடாளுமன்ற தொகுதியின்  இஸ்லாமிய மக்களிடம் கொண்டு சென்ற திமுக சிறுபான்மை மக்களின் விரோதிகளின் செயலை! மதவாத பிஜேபி கவர்மெண்ட், முஸ்லீம் ஆண்களை நசுக்கி அழிக்கும் வகையில் கொண்டு வந்திருக்கும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை ஆதரித்து பேசி, வாக்கும் போட்டிருக்கிறது அதிமுக. இவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று நறுக்கென ஒரு பிட்டை போட்டுள்ளனர் பிரசாரத்தில். இதன் விளைவாக மளமளவென இஸ்லாமியர் வாக்கு வங்கி திமுக பக்கம் சாய துவங்கியுள்ளது. அதனால் திமுக பயங்கர ஹேப்பி மூடில் உள்ளனர்.

இதுஒரு பக்கம் இருக்க மஹாமஹா ஆனந்த சித்தரே சொல்லிட்டாரு, யார் என்ன சொன்னலும் யார் என்ன செஞ்சாலும் உம் பையந்தான் வேலூர்லேர்ந்து டெல்லிக்கு போகப் போறான்னு சொல்லிட்டாரு. சித்தரே சொல்லிட்டாரு அப்புறம் என்னய்யா? எல்லோரும் கிளம்புங்க என துரைமுருகன் துட்டு கொடுக்காமல் மசெக்களை கலாய்த்து அனுப்பியது வேலூர் திமுக மாசெகள் வெதும்பி அழுகிறார்.

தேர்தல் பணிகள் ஆரம்பிக்கும்போதே திமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் வேலூரில் தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு வேலை செய்யத் தயாராக இல்லை, இதுவரை துரைமுருகன் தரப்பில் இருந்து தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கல. ஒரு வாரத்துக்கும் மேலாக சொந்தப் பணத்தைப் போட்டு செலவழித்து நொந்து போன திமுக மா.செகள் சிலர் துரைமுருகனிடமே கேட்டிருக்கிறார்கள். இன்னும் ரெண்டு மூணு நாள்தாண்ணே இருக்கு, பிரசாரமே முடிஞ்சிடும். அதிமுக சைடுல துட்டு வாரி இறைக்கிறாங்க. நாம வேல பார்க்குற நிர்வாகிகளுக்கே கை செலவுக்கு கூட இல்லாம கஷ்டப்படுறோம்.

நீங்க தான் மனசு வெக்கணும் என மாசெக்கள் கேட்டதற்கு துரைமுருகனோ, ‘போன முறையே இருந்த காச இறைச்சுட்டேன்... மிச்சம் மீதியை ஐடி அடிச்சிட்டு போயிட்டாங்க. இப்ப சல்லி காசு இல்ல. தலைவரு ஏதாச்சும் கொடுக்குறாரான்னு பாக்குறேன். கொடுத்தா தர்றேன்’ என்று வெறும் கையை விரிச்சி காட்டிட்டாராம் . இதனால் மா.செகள் நொந்து வெந்து வெளியேறியிருக்கிறார்கள்.

இப்படி சல்லி காசு கூட இல்லன்னு, நீலிக்கண்ணீர் வடிக்கறதுக்கு எதுக்காக எம்பி தேர்தல்ல நிக்கணும்? என்று மாசெகள் புலம்பித் தள்ளுயிருக்கிறார்கள்.இந்த புலம்பலை காதுபட கேட்ட  துரைமுருகனோ, ‘இதப் பாருங்க. மஹாமஹா ஆனந்த சித்தரே சொல்லிட்டாரு, யார் என்ன சொன்னலும் யார் என்ன செஞ்சாலும் உம் பையந்தான் வேலூர்லேர்ந்து ஜெயிச்சி  டெல்லிக்கு போகப் போறான்னு சொல்லிட்டாரு. சித்தரே சொல்லிட்டாரு அப்புறம் என்னய்யா? என சொன்னதைக் கேட்டு ஆடிப் போய்விட்டார்கள்.

காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் 19 ஆவது கிலோட்டரில் மகாதேவ மலை என்ற சிறு மலையிருக்கிறது. அங்கே இருப்பவர்தான் ஸ்ரீலஸ்ரீ ஆனந்த சித்தர். இவருக்கு துரைமுருகன் பல வருஷ பழக்கமாம். துரைமுருகனையே வாடா போடா  கூப்பிடும் அளவுக்கு உரிமையானவராம் அந்த சித்து. திமுகவினர் பலரிடமும் இந்த சித்து பற்றி சொல்லி அவர்களையும் சித்துவின் பக்தர்களாக்கியிருக்கிறார் துரைமுருகன். இப்போது துரைமுருகனின் அறிமுகத்தால் அதிமுகவில் பலரும் இந்த சித்துவை நோக்கிச் படையெடுக்கிறார்களாம்.