Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வரும்!! பாமகவிற்கு ஸ்கெட்ச் போடும் துரைமுருகன்...

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்குள் வேறு சில கட்சிகள் இடம் பெறலாம் என்றும் , சில கட்சிகள் வெளியேறலாம் என்றும், எப்போ, எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தனியார்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து அதிரடியை அரங்கேற்றியுள்ளார். 

Dhuraimurugan plan for alliance with PMK
Author
Chennai, First Published Feb 9, 2019, 9:18 PM IST

துரைமுருகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லை எனறும் தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது என்றும் அதிரடியாக தெரிவித்தார். இது அரசியலில் குறிப்பாக மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன.

இதையடுத்து ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து சமாதானப்படுத்தினார். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர துரைமுருகன் பெரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Dhuraimurugan plan for alliance with PMK

இது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக கட்சிகளிடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என்பதால், எப்படியாவது வி.சி.கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என துரைமுருகன் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த, துரை முருகன், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்குள் வேறு சில கட்சிகள் இடம் பெறலாம் என்றும் , எப்போ, எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அதிரடியைக் கிளப்பினார்.

Dhuraimurugan plan for alliance with PMK

தற்போது திமுக, காங்கிரஸ், மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை கூட்டணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது துரைமுருகனின் இந்த ஸ்டேட்மெண்ட் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொடர்ந்து பேசும்போது கடைசி நேரத்தில் தொகுதிப் பங்கீட்டின் போது சில கட்சிகள்  கூட்டணியில் இருந்து விலகலாம், சில கட்சிகள் கூட்டணிக்குள் வரலாம் என பேசியிருப்பது திமுக கூட்டணி கட்சிகளை அதிர வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios