"ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை" என அழகிரியின் மகன் துரைதயாநிதி கி.வீரமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஊர்வலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து தொடங்கி, வாலாஜா சாலை வழியாக கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து சேர்ந்தது. இதன்பின்னர், கருணாநிதிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, தாய்க்கழகமான திராவிடர் கழகம், திமுகவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.அப்போது அழகிர்யைபற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த கி.வீரமணி, வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்  கோபமாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்த முக அழகிரியின் மகன் துரை தயாநிதி டிவீட் செய்துள்ளார். அதில்,  காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன் என திராவிடக் கழகத் தலைவர் வீரமணியை மானபங்கப் படுத்தியுள்ளார்.