Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெற்றதும் அரசியலுக்கு வருகிறார் தோனி... தட்டித் தூக்கி சிக்சரடிக்கத் தயாராகும் பாஜக..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மஹேந்திர சிங் தோனி அரசியலில் நுழைய இருப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சஞ்சய் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
 

Dhoni returns to politics after retirement
Author
India, First Published Jul 13, 2019, 12:23 PM IST

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மஹேந்திர சிங் தோனி அரசியலில் நுழைய இருப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சஞ்சய் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.Dhoni returns to politics after retirement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியிடம் வெற்றியை இழந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.  Dhoni returns to politics after retirement

இந்நிலையில் அவர் ஓய்வை அறிவித்த பின் அரசியலில் நுழைய உள்ளார் என பாஜக மூத்த தலைவர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ’’தோனி 'நரேந்திர மோடி அணியின்' ஒரு பகுதியாக அரசியலில் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கலாம். தோனி காவிநிற கட்சியில் சேரலாம். இந்த விவகாரம் குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர் ஓய்வு பெற்ற பின்னரே இந்த முடிவை எடுப்பார்.Dhoni returns to politics after retirement

தோனியை நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு காவிநிற கட்சியில் சேருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். தோனி எனது நண்பர், அவர் உலகப் புகழ் பெற்ற வீரர், அவரை கட்சி மடிக்குள் கொண்டுவருவது குறித்து நீண்ட கால யோசனை இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios