Asianet News TamilAsianet News Tamil

குடிகாரர்களுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் நீங்க, தமிழக மக்களுக்கு தர முடியலையா? தயாநிதி மாறன் ஆவேசம்

சரக்கு ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் தமிழக அரசு பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாதது தனது ஆவேச கண்டனத்தை மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
 

Dhaynidhi maran speech against edappadi palanisamy
Author
Chennai, First Published Jun 23, 2019, 4:57 PM IST

சரக்கு ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் தமிழக அரசு பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாதது தனது ஆவேச கண்டனத்தை மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சென்னையில ஐடி கம்பெனி தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்லியுள்ளது. தனியார் பள்ளிகளும் மாணவர்களை ஸ்பூன், தண்ணீர் பாட்டில் எடுத்துவர சொல்லியுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சி மழை வர யாகம் நடத்தி வருகிறது. எள்ளலும் இவர்கள் தண்ணீர் வைத்து அரசியல் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

Dhaynidhi maran speech against edappadi palanisamy

அந்த வகையில் பொதுமக்களுக்கு தண்ணீர் தராத தமிழக அரசை கண்டித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது கையில் காலிக்குடத்தை வைத்துக்கொண்டு பேசிய தயாநிதி மாறன்; மழை பெய்யவில்லை, அதனால் தண்ணீர் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 

மழை பெய்யவில்லை என்பதுதான் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே? தண்ணீர் பிரச்சனைக்காக கடந்த 8 வருஷமா என்ன செஞ்சீங்க? தினமும் மது ஆலைகளுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் லாரி, பைப் கனைக்சன் போட்டு சபளை செய்கின்றார்கள். அந்த தண்ணீரை சென்னை மக்களுக்கு கொடுத்தாலே சென்னையின் தண்ணீர்க்கஷ்டம் தீர்ந்துவிடுமே என்று கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios