Asianet News TamilAsianet News Tamil

தர்மயுத்த காலம்.. ஓபிஎஸ்ஸுடன் பயணித்ததை நினைத்து வெட்கப்படும் கே.பி. முனுசாமி!

ஓபிஎஸ்ஸுடன் ஏன் பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சரும் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். 

Dharmayuddha period.. I am ashamed of traveling with OPS.. KP Munusamy slam OPS!
Author
Chennai, First Published Jul 9, 2022, 9:20 PM IST

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே அதிகாரச் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இபிஎஸ் அணியில் உள்ள கே.பி. முனுசாமிக்கும் ஓபிஎஸ் அணியில் உள்ள கோவை செல்வராஜூக்கும் இடையே வாக்கு வாதங்கள் நடைபெற்று வருகின்றன. 2017-இல் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அவர் பக்கம் நின்ற கே.பி. முனுசாமி, இன்று இபிஎஸ் பக்கம் நிற்கிறார். இந்நிலையில் 2017-இல் ஓபிஎஸ்ஸுடன் பயணித்ததற்கு கே.பி. முனுசாமி வேதனை தெரிவித்திருக்கிறார். சென்னையில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறுகையில், “என்னுடைய மகன் பெயரில் 99 ஆண்டுகளுக்கு பெட்ரோல் பங்க்கை லீசுக்கு வாங்கியிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஒபிஎஸ் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் இபிஎஸ்.. முக்கிய பிரமுகர்கள் திடீர் ஆதரவு.. உயரும் எண்ணிக்கை.!

Dharmayuddha period.. I am ashamed of traveling with OPS.. KP Munusamy slam OPS! 

அந்த பெட்ரோல் பங்க் ஒரு கூட்டுறவு இணையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் வர வேண்டும் என்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு தீர்மானம் போட்டு இணையதளம் வாயிலாக உத்தரவு பிறப்பித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்துதான் தொடங்கப்பட்டது. அதைத்தான் தற்போது அமைச்சர் திறந்து வைத்திருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் ஒப்பந்தம் தொடங்கி 2040- இல் நிறைவடைகிறது. இது 20 ஆண்டுகள் ஒப்பந்தம் ஆகும். இதுகூட கோவை செல்வராஜூக்கு தெரியவில்லை. பொது வாழ்க்கையில் இருக்கும் எங்கள் மீது நற்பெயரை கெடுக்கும் வகையில் கோவை செல்வராஜ் பழி சுமத்தி உள்ளார்.

இதையும் படிங்க: கொடநாடு கொலை குற்றவாளியை எப்போ தூக்கப் போறீங்க.? ஸ்டாலினை விடாமல் கேள்வி கேட்கும் ஓபிஎஸ் தரப்பு.!

Dharmayuddha period.. I am ashamed of traveling with OPS.. KP Munusamy slam OPS!

ஓபிஎஸ்ஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்தக் கருத்தை கோவை செல்வராாஜ் சொல்லியிருக்கிறார். இபிஎஸ்ஸுடன் நான்கரை ஆண்டு காலம் துணை முதல்வராக பயணித்தீர்கள். அப்போது இந்த சிந்தனை எல்லாம் வரவில்லையா? கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் வெறுத்து ஒதுக்கும் சூழலிதான் எங்களுடைய நற்பெயரை கெடுக்க இதுபோல கூறுகிறார். நீண்டகாலமாக ஓபிஎஸ்ஸுடன்  அரசியல் பயணம் மேற்கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு மிக வேதனையாக இருக்கிறது. ஓபிஎஸ்ஸுடன் ஏன் பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” என்று கே.பி. முனுசாமி தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிங்க: பொதுக் குழுவை தூக்கி ஓரம்போடு... எடப்பாடி தலைமீது தொங்கும் கத்தி.. 11 ஆம் தேதி நடக்கப்போகும் டுவிஸ்ட். ??

Follow Us:
Download App:
  • android
  • ios