Develop good politicians like us OBS for Teachers Request
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்களில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழஙகினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்ச்ர செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தற்போதும் கல்வி துறை மிக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
