Asianet News TamilAsianet News Tamil

பாமகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி..! உடனடியாக பதவி கொடுத்த ராமதாஸ்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார். இதனையடுத்து பாமக மாநில துணைத்தலைவராக தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Devdas a former Member of Parliament of the Congress party  joined PMK
Author
First Published Dec 7, 2022, 12:16 PM IST

பாமகவில் காங். முன்னாள் எம்பி

நாடாளுமன்ற தேர்தலை இலக்காக வைத்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சிகளை பலப்படுத்தி வருகிறது. இதற்காக மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை அணியில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ் தற்போது பாமகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும், தொழிலதிபருமான சேலம் இராமசாமி உடையார் அவர்களின் புதல்வரும்,  சேலம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான  தேவதாஸ்  அவர்கள்  இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவை அழிக்க ஆயிரம் பேர் எதற்கு? பழனிசாமி ஒருவரே போதாதா? இதுதான் உங்களின் கிழிந்த ஜாதம்.. முரசொலி..!

Devdas a former Member of Parliament of the Congress party  joined PMK

துணை தலைவர் பதவி வழங்கிய ராமதாஸ்

இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த தேவதாஸ்க்கு அக கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான கடிதத்தைபாமக நிறுவனர் ராமதாசியிடம் இருந்து   தேவதாஸ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின் போது  பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும்,  வன்னியர் சங்கத்தின் செயலாளருமான கார்த்தி உடனிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் ஆவேசம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios