முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா.. இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லாத இபிஎஸ்..!
முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. சென்னை நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. சென்னை நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழா மற்றும் 115-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க;- கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதியா? விபத்தா? போறபோக்கில் திமுகவை விளாசிய இபிஎஸ்..!
இந்நிலையில், சென்னை, நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருஉருவச் சிலைக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், திண்டுக்கல் சீனிவாசன், நந்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் பசும்பொன்னுக்கு செல்லாமல் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- மரத்தில் துணியை சுற்றி வைத்தால் கூட அண்ணார்ந்து பார்ப்பவர் ஜெயக்குமார்.. பங்கமாய் கலாய்த்த கோவை செல்வராஜ்..!