ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 7 தொகுதிகள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

தேவேகவுடா தனது சொந்த தொகுதியான ஹாசனை பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரசார் அழுத்தம் கொடுத்ததை அடுத்து தேவேகவுடா, துமகூரு தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டார்.

அவர் வெற்றி பெறுவார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறின. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பலம் வாய்ந்த அந்த தொகுதியில் தேவேகவுடா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  அடைந்ததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா மிகவும் வேதனையுடன் உள்ளார். 

இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேவேகவுடா தோல்வி அடைந்திருந்தார். தற்போது இது அவருக்கு 2-வது தோல்வி ஆகும். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், கூட்டணி கட்சியான காங்கிரசும் படுதோல்வி அடைந்ததால் தேவேகவுடா மிகவும் விரக்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.