student to have an inquiry in Salem Tamilisai
சேலம் மாணவன் முத்துகிருஷ்ணன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். நேற்று மாலை அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த அவரது பெற்றோர், உடனடியாக டெல்லி விரைந்தனர். அவர்கள், முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. அவனது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதையொட்டி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முத்துகிருஷ்ணன் சாவில் மர்மம் உள்ளது. இதனை உரிய விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மாணவன் முத்து கிருஷ்ணன் மர்மச்சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
