Delhi to support struggling farmers across the edge
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
வறட்சி நிவாரணம், பயிர்கடன் தள்ளுபடி, காப்பீடு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 21 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சேலத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் வாயில் கருப்புத் துணியை கட்டி மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை,திருச்சி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
