கூவத்தூர் ரிசார்ட்டில் 2000 போலீசார் குவிக்கப்ட்டுளளனர்.
எந்த நேரமும் உள்ளே நுழைந்து எம்எல்ஏக்களை விடுவிக்க இருகின்றனர்.
நாடே இரண்டுபட்டு பரபரப்புடன் உள்ள நிலையில் தீர்ப்பும் வெளியாகியுள்ளது.
இவ்வளவு பரபரப்புகிடையேயும் அசராத சசிகலா தனது மன்னார்குடி நாடக கம்பெனியின் சித்து வேலைகளை விடாமல் செய்து வருகிறார்.
எல்லாமே போலி.. எல்லாமே நடிப்பு... எல்லாமே ஏமாற்று வேலை... எல்லாமே பொய் பிம்பம் என்பது சசிகலாவின் உடலில் ஊறிய ஒன்று.
வெளியே எதனை பேர் இறந்து கிடந்தாலும் ஏன் எல்லாம் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கிறார்கள் என நாக்கு கூசாமல் அசால்ட்டாக கேட்கும் குணம் கொண்டவர்தான் சசிகலா.

இது ஏதோ பத்திரிகை செய்திக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல. அவரால் பாதிக்கபட்ட பல ஆயிரம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தமிழகத்தின் மிக பிரபலமான பத்திரிகையாளர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் தான் இவை.
தீர்ப்பு அறிவித்தபிறகு உடனடியாக சரணடைய சசிகலாவுக்கு உத்தரவிட்ட பிறகும் எப்படியெல்லாம் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கான ஸ்கெட்ச்சை தொடர்ந்து போட்டு வருகிறார்.
இனி தங்கள் குடும்பத்து பருப்பு வேகாது என்று உறுதியாக முடிவாகி விட்ட நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எனும் அப்பாவியை கேடயமாக வைத்து அடுத்த காயை நகர்த்துகிறார் சசிகலா.
அதாவது ஜெயலலிதாவின் ரத்த உறவை முதலமைச்சர் ஆக்கி விட்டால் அனைவரையும் ஏற்று கொள்வார்கள் என்பதால் இந்த முடிவை மன்னார்குடி குடும்பம் எடுத்து தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
