ஜெயலலிதாவின் பெயரையும் புகழையும் காப்பாற்ற அரசியலில் குதிப்பேன்…ஜெ அண்ணன் மகள் தீபா அதிரடி…

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான தனது உறவு மற்றும் சசிகலா குடும்பத்தினரால் தானும், தனது குடும்பத்தினரும் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றப்பட்டோம் என்பது குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் தனக்கு அரசியலில் மிகுந்த ஈடுபாடு இருப்பதாக கூறினார். தான் அதிமுக வில் உறுப்பினராக இல்லை என்றாலும், அத்தை உயிருடன் இருந்தபோதே கழகத்தில் இணைய விரும்பியதாகவும்,ஆனால் அது முடியாமல் போனதாகவும் தீபா தெரிவித்தார்,

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது கூட தன்னை அரசியலுக்குவர வேண்டும் என்று பலரும் கூறியதாக தெரிவித்தார். அதிமுக வுக்காக ஜெயலலிதா பல போராட்டங்களை சந்தித்தவர் என்றும், அக்கட்சிக்காக பாடுபட்டவர் என்றும் தெரிவித்த தீபா. அதைக் காக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அரசியலில் நான் ஈடுபடவேண்டும் என்ற நிலை வந்தால் நிச்சயமாக அதற்கான முடிவை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.