*    அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடக்கும்போது தம்பிதுரையோ, அமைச்சர் விஜயபாஸ்கரோ தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து தங்கள் கட்சியை வெற்றி பெற வைத்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகிக்குறேன்: செந்தில் பாலாஜி. 
(பாஸு, இடைத்தேர்தல்ன்னு ஒண்ணு நடந்தால்தானே, எப்படியும் இவங்க ஏகத்துக்கும் இழுத்தடிப்பாங்க அப்படிங்கிற நம்பிக்கையில நீங்க எடுத்துவிடுறது புரியுது. அதேநேரத்துல, மக்கள் உங்க மேலே ஏதாச்சும் காண்டுல இருந்து ஒட்டுமொத்தமா அ.தி.மு.க.வை ஆதரிச்சு, உங்களை அரசியல்ல இருந்து டெலிட் பண்ணிட போறாங்க. சாக்கிரத)

*    அ.தி.மு.க.வில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருக்கும் உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் கொண்டுபோயி சேர்த்தால் என் வேலை முடிந்தது அவ்வளவுதான்: தீபா. 
(பேபிம்மா உங்க கடமையில 75% முடிஞ்சுதே. நீங்களும், உங்க புருஷன் மாதுக்குட்டியும் அ.தி.மு.க.வுல சேர்ந்தாச்சு மாதிரிதான். மீதி இருக்கிற உங்க தோழர் ஆயில் ராஜாவும் வந்துட்டா ஓ.கே. உங்க பேரவையில் இருந்த மூணு உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில். உங்களோட இந்த அரசியல் புரட்சியை புரிஞ்சுக்கவே முடியாம உங்க மாதுக்குட்டியே மழுங்க மழுங்க முழிக்குறதை பாருங்க, கண்கொள்ளா காட்சி)

*    சீட் முக்கியமில்லை, நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம் எனும் எண்ணத்தில்தான் மெகா கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது: அமைச்சர் தங்கமணி. 
(அப்டியா தல, அப்போ அடுத்த தேர்தல்ல சீட் கேட்க மாட்டீங்க,  குமாரபாளையம் பக்கம் காவிரி ஆற்றை சுத்தப்படுத்துறது, தூர்வாருறதுன்னு மக்கள் சேவையில இறங்கி மஹோத்வ நிலைமை அடைப்போறீங்கன்னு எடுத்துக்குறோம். தப்பித் தவறி சீட் கேட்டீங்கன்னா இன்னா பண்ணட்டும் நாங்க?)

*    பாதிக்கப்பட்ட குழந்தை எந்த ஊரில் இருந்தாலும், எந்த வீட்டில் இருந்தாலும் அது நம் குழந்தை எனும் எண்ணம் வரவேண்டும். அப்போதுதான் இந்த சமூகம் உருப்படும்: கமல்ஹாசன். 
( சரி தல, இப்படியே ஊரான் வீட்டு குழந்தைகளோட நன்மைக்காகவே பேசிட்டு இருந்தா எப்படி? உங்க வீட்டு பொண்ணுங்களோட பாதுகாப்பு, கலாசார காப்பு பற்றியெல்லாம் நீங்க யோசிக்கணும்ல! எப்பவுமே பொதுசேவன்னா எப்படிங்க?)

*    டெல்லியில் நூறு நாட்கள் போராடிய விவசாயிகளை அழைத்து பேசவில்லை மோடி. ஆனால் தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் நடிகர்கள், கேவலம் நடிகையரையும் மோடி அழைத்துப் பேசினார்: ஸ்டாலின். 
(மீண்டும் மீண்டும் வாய் புளிச்சுதோ, மாங்கா புளிச்சுதோன்னு பேசிட்டீங்களே தள்பாதி! கேவலம் நடிகையால்தான் உங்க கட்சி பல வருஷமா ஆட்சியில் உட்கார முடியாம வனவாசம் சென்றும், வீதி வீதியா நடந்தும் தேற முடியாம கிடக்குதே, அதுக்கு என்ன சொல்றீங்க?ன்னு விமர்சகர்கள் கேக்குறாங்களே. பதிலென்ன  பாஸு?)