ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அதிமுக வுக் தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பேனர்களையும்,வால் போஸ்டர்களையும் வைத்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தீபாவிற்கு 'சின்னத்தாய்' பட்டம் சூட்டி திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நத்தம், பழநி கோதைமங்கலம் உட்பட பல இடங்களில் ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'நிதியை நீதி வென்றது- நேற்று, நீதியை நிதி வென்றது - இன்று' சின்னத்தாய் தீபாவே தமிழகத்தை தலைமை ஏற்க தகுதியானவர் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

திருப்பூரிலும் 'ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலுர் பகுதியிலும் தீபாவுக்கு ஆதரவான பேனரால் அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோடநாடு பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.