ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா . ஜெயலலிதா மறைந்த பிறகு இவரும் ஒரு கட்சி தொடங்கி , அவரின் அரசியல் வாரிசு தான் தான் என அறிவித்து கொண்டார் . எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என கட்சி நடத்தி வந்தார் .

இந்த நிலையில் தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் மாதவன், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கினார் . பின்னர் இருவரும் சமாதானம் ஆகி , இரண்டு கட்சிகளையும் இணைத்து கொண்டனர் .

தற்போது தீபாவும் மாதவனும் சேர்ந்து அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர் .அதில் அம்மா இறந்த போது அலைகடலென தொண்டர்கள் திரண்டு வந்து தன்னை அரசியலுக்கு அழைத்ததால் தான் கட்சி தொடங்கியதாகவும் , அதே தொண்டர்கள் இப்போது அதிமுகவில் இணைய கூறுவதால் , தாய் கழகத்தோடு இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார் .

அதில் தீபா மற்றும் மாதவன் இருவரும் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள்  துணைப் பொதுச்செயலாளர்  என முறையே  கையெழுத்து போட்டு உள்ளனர் .