deepa and deepak fighting in poes garden
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

பின்னர், வெளியே வந்த தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தன்னை குண்டர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். மேலும், காலை முதல் தன்னை, தீபக் போன் செய்து அழைத்தார். இங்கு ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செய்ய வேண்டும் என கூறியதால், வந்தேன் என்றார்.
இதற்கிடையில், போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தீபக் வெளியே வந்தார். அப்போது தீபா, தீபக் ஆகியோருக்கு மோதல் ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் நடந்தது. இதை தடுக்க வந்த தீபாவின் கணவர் மாதவனை, தீபக் தாக்குவதற்கு கையை ஓங்கியதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தீபா, “என்னை வரவழைத்து கழுத்தை அறுத்துவிட்டாயே. எச்சக்கலை.பிச்சைக்காசுக்காக இப்படி செய்யாதே. போ.... இனி மூஞ்சியிலேயே முழிக்காதே... மாதவனையே கை நீட்டுற நீ.. பொறுக்கி ராஸ்கெல் என திட்டினார். இதை கேட்டு, தீபக் அங்கிருந்து சென்றுவிட்டார்.
