காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து இக்கூட்டம் இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கூட்டத்துக்கு தா.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட கட்சி தலைவர்களும், விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

காவிரி விவகாரத்தில் சிறப்பு சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும்.

காவரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முடிவு.

டெல்டா விவசாயிக தமிழக அரசு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

திசை திருப்பும்நோக்கில் செயல்படும் மத்திய அரசுக்கும கண்டனம்.

தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.