சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிகுறிச்சி கிராமத்தில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பற்றியும், பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அவரை தொடர்ந்து பேச அனுமதிக்காமல் தடுத்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் வாக்குவாதம் செய்த மாவட்ட செயற்குழு உறுப்பினரான பாண்டி வேலு காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிகுறிச்சி கிராமத்தில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பற்றியும், பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அவரை தொடர்ந்து பேச அனுமதிக்காமல் தடுத்தனர்.

இதை கேட்காமல் பாண்டிவேலு தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனையடுத்து, ப.சிதம்பரத்துடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த கட்சியினர் பாண்டிவேலுவை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார். பாண்டி வேலுவிடம் விளக்கம் கேட்டும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கேள்வி கேட்டு, விமர்சனங்களை முன் வைத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி, கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவம் மானாமதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.