டிடிவி தினகரன் நியமனம் சட்டவிரோதம் என்ற அறிவிப்பு தான் தோன்றித்தனமானது எனவும்  துரோகிகளின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துவிட்டார் எனவும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி அணியின் விசுவாசி நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் நியமனம் சட்டவிரோதம் என்ற அறிவிப்பு தான் தோன்றித்தனமானது எனவும்  துரோகிகளின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துவிட்டார் எனவும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.