Asianet News TamilAsianet News Tamil

பற்றி எரிகிறது டார்ஜிலிங் - நெதர்லாந்து பறந்தார் மம்தா

Darjeeling unrest Shutdown continues thousands gather for GJM protest rally
Darjeeling unrest Shutdown continues thousands gather for GJM protest rally
Author
First Published Jun 20, 2017, 8:29 AM IST


தனி மாநிலம் கோரி டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மேற்குவங்க மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் வங்க மொழி கட்டாயம் என்று முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Darjeeling unrest Shutdown continues thousands gather for GJM protest rally

வங்கமொழி கட்டாயம் என்ற அறிவிப்பை ஏற்காத முடியாது என்றும், இந்த உத்தரவில் இருந்து டார்ஜிலிங்கிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தங்களது போராட்டத்தை முன்வைத்தனர். இதற்கிடையே கூர்க்க ஜன்முக்தி மோச்சாவின் தலைவைர் அலுவலகத்தில் காவல்துறையினர் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வில், அம்பு, ஹாக்கி மட்டைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையின் போது கூர்க்கா இன மக்களின் தலைவர் பிமல் குருங் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. காவல்துறையினரின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டார்ஜிலிங் வீதிகள் போர்க்களமானது. போலீசார் பலர் தாக்கப்பட்டனர்.

Darjeeling unrest Shutdown continues thousands gather for GJM protest rally

கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். ஒவவொரு நாளும் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகக் கொண்டே செல்லும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி நெதர்லாந்த் சென்றுள்ளார்.

இதற்கிடையே தனிமாநிலம் கோரி நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அதிக கவனம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மேற்குவங்க அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios