லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவனம் வாங்கியதில்  ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு உட்பட  நான்கு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு ராஞ்சியிலுள்ள பிஸ்ரா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். 

அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட லாலு, கடந்த ஓராண்டாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் சீறுநீரக பாதிப்பால் அவதியடைந்துவந்த லாலு பிரசாத் யாதவ் தற்போது ராஞ்சியிலுள்ள ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு சிகிசை அளித்து வரும் டாக்டர்கள் , லாலுவின் சிறுநீரகம் 63 சதவீதம் பாதிக்கப்பட்டுவிட்டது. 37 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. 

கடந்த ஒரு வாரமாக அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ரத்தத்தில் நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அவரது சிறுநீரக இயக்கம் 50 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக குறைந்துள்ளது. ரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளது என மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.