விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்ச்செல்வனை நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக தலைமை மீதும் என கடுமையான விமர்சனங்களால் விக்கிரவண்டியில் அனல் பறக்க விட்டுள்ளார். 

அங்கு தனது ஆவேச பேச்சை தொடங்கிய சிவி சண்முகம்; மு.க.ஸ்டாலினின் உருட்டல், மிரட்டல்களுகெல்லாம் அஞ்சியவன் தாம் இல்லை, நீ என்ன உத்தமர் காந்தியா?  இனி கனவில் கூட ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது என்றும், இன்னும் நூறு கருணாநிதி பிறந்தால் கூட செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திமுக செல்ல முடியாது. 

ஸ்டாலின் தனது ஜம்பத்தை வேறு எங்காவது காட்ட வேண்டும், அதை அதிமுகவிடம் காட்டக்கூடாது எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். விக்கிரவாண்டியில் குற்றவியல் நீதிமன்றத்தை தாம் கொண்டுவந்தால் திமுகவுக்கு என்ன வந்தது? திமுகவுக்கு மட்டும் தான் வழக்கறிஞர்கள் இருக்கிறார்களா?  ஏன் எங்களிடம் இல்லையா? என ஆவேசமாக பேசிய சிவி. உன்னை விட பத்தடி மேல பாய்பவன் நான், நீ மட்டும் தான் வழக்கு போடுவியா? என ஸ்டாலினை தெறிக்கவிட்டுள்ளார். 

அதோடு விட்டாரா ? திமுகவினர் முதுகில் 1000 அழுக்கை சுமந்துக்கொண்டு எங்களை குறை சொல்லலாமா? உங்க கதை எனக்குத் தெரியாதா? நோண்டத் தொடங்கினால் தாங்கமாட்டீங்க என எச்சரிக்கை விட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டனர், இப்போது தெளிவாக உள்ளதால் திமுகவின் பிரச்சாரம் எடுபடாது என சிவியின் இந்தப் பேச்சைக்கேட்டு அலண்டு போன பொன்முடி, சிவியின் பேச்சை அப்படியே திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல, அவரோ பயங்கர எரிச்சலில் உள்ளாராம்.