அதிமுக ஆட்சியை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைய வேண்டும். முதல்வரும் துணை முதல்வரும் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்;- அதிமுக ஆட்சியை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைய வேண்டும். முதல்வரும் துணை முதல்வரும் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் . பச்சை நிற வேஷம் போட்டவர் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியுமா? ஏறு தூக்கியவர், இன்று போய் சேற்றை மிதித்தவர் எல்லாம் விவசாயியாகிவிட முடியுமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், பேசிய உண்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தை செய்து கொண்டு இருப்பவர் தமிழக முதல்வர். விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுகவுக்கு தெரியும். நிலத்தையும், வீட்டை அபகரிப்பது தான் திமுகவினர் தொழில். நீலி கண்ணீர் வடிக்கிறாரா ஸ்டாலின்?

திமுக மீது உள்ள மிகப்பெரிய 2 ஜி ஊழல் இதுவரை நடைபெறாத ஊழல். 2 லட்சம் கோடி ஊழல் செய்து நாட்டையே உலகத்தையே சுரண்டிய குடும்பம், கருணாநிதி குடும்பம். கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய அந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 5-ம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என, டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறுவார்? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.