Asianet News TamilAsianet News Tamil

பெர்ஃபாமென்ஸ் இல்லாத சி.வி.சண்முகத்தின் ஆணவப்பேச்சு... ஓ.பி.எஸ்- ஈ.பிஎஸ் பதில் சொல்ல பாஜக வலியுறுத்தல்..!

பா.ஜ.க குறித்து அ.தி.மு.க.,  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்து கூட்டணியில் சண்டை ஏற்படுத்தும் முயற்சி. இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் அளிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

CV Shanmugam's arrogant speech without performance ... BJP's insistence to answer OPS-EPS
Author
Tamil Nadu, First Published Jul 7, 2021, 12:25 PM IST

பா.ஜ.க குறித்து அ.தி.மு.க.,  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்து கூட்டணியில் சண்டை ஏற்படுத்தும் முயற்சி. இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் அளிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க தோற்று போனதற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.CV Shanmugam's arrogant speech without performance ... BJP's insistence to answer OPS-EPS

இது தொடர்பாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்து கூட்டணியில் சண்டை உருவாக்கும் முயற்சி. பா.ஜ.கவுடன் கூட்டணி என தெரிந்துதான் தேர்தலில் நின்றார், தேர்தலில் தோற்ற பின் பா.ஜ.க மீது குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது. அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள்ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இதற்கு பதில் செல்ல வேண்டும். அப்போதுதான் குழப்பம் இல்லாமல் இருக்கும்.

சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை என கூறி, தனக்கு வாக்களித்த  87403 மெஜாரிட்டி மக்களையும் சி.வி.சண்முகம் அவமானப்டுத்துகின்றார். பல முன்னாள் அமைச்சர்கள் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சி.வி.சண்முகம் சரியாக பெர்ஃபாமென்ஸ் செய்யாததால்  தோற்றார்.CV Shanmugam's arrogant speech without performance ... BJP's insistence to answer OPS-EPS

வெறும் 14 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுகளை மெஜாரிட்டி மக்களுடன் ஒப்பிடுவது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது. தன்னுடைய செயலற்ற தன்மையை, தன்னுடைய பெர்ஃபாமென்ஸ் கோளறுகளை பா.ஜ.க மீது சி.வி.சண்முகம்  தூக்கி போடுகின்றார். பா.ஜ.கவை வசைப்பாடுவதை ஏற்க முடியாது. அ.தி.மு.க தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும். இந்த கருத்தை அ.தி.மு.க தலைமை ஏற்கவில்லை எனில்,  சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை அக்கட்சி எடுக்க வேண்டும். 5 வருடம் மந்திரியாக இருந்து சரியாக பெர்மான்ஸ்  காட்டி இருந்தால் சிறுபான்மையினர் வாக்களித்து இருப்பார்கள். பொது வெளியில் இந்த கருத்தை சி.வி.சண்முகம்  சொன்னதால் அதிமுக இதற்கு பதில்  சொல்லி ஆக வேண்டும்”என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios