Asianet News TamilAsianet News Tamil

ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு கட்டாயம்... மக்கள் கையில் நிவாரணம் கொடுங்க... திகைக்க வைக்கும் தி.மு.க. எம்.பி

ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் உருவாக இருப்பதால் மக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என திமுக  தர்மபுரி தொகுதி எம்.பி மருத்துவர் செந்தில் குமார் வலியுறுத்தி இருக்கிறார். 

Curfew is mandatory until June ... Give relief to the people ... Terrifying DMK MP
Author
Tamil Nadu, First Published Apr 22, 2020, 11:16 AM IST

ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் உருவாக இருப்பதால் மக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என திமுக  தர்மபுரி தொகுதி எம்.பி மருத்துவர் செந்தில் குமார் வலியுறுத்தி இருக்கிறார். 

கொரோனாவால் உலகம் முழுவதும் 25 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த வாரம் சில நாள்கள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 Curfew is mandatory until June ... Give relief to the people ... Terrifying DMK MP

 சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.

 

இந்நிலையில் இனிமேல் தான் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும். ஆகையால், ஊரடங்கை இப்போது தளர்த்தும் எண்ணம் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கலாம் என திமுக  எம்.பி., டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இதே போல பாஸிட்டிவ் கேஸ் அதிகரித்துக்கொண்டே சென்றால் ஊரடங்கு ஜூன் வரை நீடிப்பது தவிர வேறு வழி இல்லை. இந்த தருணத்தில் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் அவர்கள் கையில் அரசு நிதி சென்றடைய அனைத்து ஏற்பாடும் முன் எடுப்பது தான் இந்த தருணத்தில் மிக அவசியமானது. வாழ்வாதாரத்திற்கு வழி செய்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios