அரசியலில் இறங்க வேண்டும் என்ற வேகம் இருந்தால் அப்படியே குதித்து விடவேண்டும் அதுதான் உண்மையாக அரசியல்,   ஆனால்  வியாபார நோக்கத்திற்காக அரசியலுக்கு வருவது மட்டுமல்லாது  அதற்கு ஆன்மீக அரசியல் என்றும் பெயர் வைக்கக்கூடாது என்ன நடிகர் ரஜினிகாந்தை நடிகர் சத்யராஜ் நேரடியாக தாக்கியுள்ளார் .  பெரியார் குறித்து  ரஜினி விமர்சித்திருந்த நிலையில்  நடிகர் சத்யராஜ் ரஜினிகாந்திற்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன்னர் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்  1971ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுள்களான ராமர் சீதையின் உருவ படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவு செய்யப்பட்டது என கூறியிருந்தார். ரஜனி பெரியாரை விமர்சித்து பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

  

ரஜினியில் பேச்சில்  உண்மை இல்லை என  அதிமுக திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்கள் ஒன்றிணைந்து  ரஜினியை கண்டித்தன. பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும்  பாஜக ஆர்எஸ்எஸ்ஐ மகிழ்விக்கும் நோக்கிலும் ரஜினி இவ்வாறு பெரியார் மீது அவதூறு பரப்புகிறார் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது .  அதுமட்டுமின்றி  பெரியாரை அவதூறாக பேசியதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது .  ஆனால் தன் பேச்சில் எந்த தவறும் இல்லை அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக  மறுத்துவிட்டார் .  இந்நிலையில் இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது .  இந்நிலையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிந  நடிகர் சத்யராஜ் ,  தமிழுக்காகவும் , தமிழருக்காகவும் ,  பெண்கள் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவரை எந்தப் புரிதலும் இல்லாமல் ரஜினி கொச்சைப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியதுஎனகூறியுள்ளார் . 

அநீதியைத் தட்டிக் கேட்க அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னாள் மனதில் அந்த உணர்வு எழுந்த அதே வேகத்தில் அரசியலில் குதித்து விட வேண்டும் அதுதான் உன்மையான அரசியல்,  ஆனால் ரஜினி வியாபார நோக்கத்தில் அரசியலுக்கு வருகிறார்... அந்த வியாபாரத்திற்கு அவர் வைத்துள்ள பெயர் தான் ஆன்மீக அரசியல்... என நடிகர் சத்யராஜ்  நேரடியாகவே ரஜனிகாந்தை தாக்கியுள்ளார் . தொடர்ந்து ரஜினிகாந்த்தை விமர்சித்த அவர்,   இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஆன்மிகவாதிகளாக இருக்க முடியாது ஆன்மிகம் என்பது அன்பு கரம் கொண்டு ஆதரிப்பது தான் என  ரஜினிகாந்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார் ஏற்கனவே காவிரி விவகாரத்தில் ரஜினியை கடுமையாக தாக்கிய சத்யராஜ் ,  தற்போது பெரியார் விவகாரத்தில் ரஜினி ஒரு அரசியல் வியாபாரி என தாக்கியுள்ளது திரையுலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .