முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அணியும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியும் இணையுமா? இணையாதா? என்கிற பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையேயும், பரபரப்புக்கு இடையேறும் இன்று இணைந்துள்ளது. 

இந்நிலையில் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஏன் தினகரன் மற்றும் சசிகலாவை ஒதுக்கி வைத்துள்ளனர் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் இது குறித்து அவர் பேசுகையில் சசிகலாவை இந்த இரண்டு அணியை சேர்ந்தவர்களும் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு சின்னம்மா அப்படி என்ன தீங்கு செய்தார்? தற்போது இருவரையும் ஒதுக்கி வைக்கும் இவர்கள் ஏன் இவர்களை ஆதரித்து பிராமண பாத்திரங்கள் தாக்கல் செய்தார்கள்.

மேலும் தற்போது தினகரனை ஒதுக்கும் பழனிச்சாமி ஏன் தொகையில் தொப்பி அணிந்துக்கொண்டு தினகரனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார் என்பதற்கு அவர் விளக்கம் கொடுத்தே தீரவேண்டும் என மிகவும் கோபமாக பேசினார் சி.ஆர். சரஸ்வதி.

தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் எப்படி பெரியகுளத்தில் இருந்து இங்கு வந்தார், என்பது அனைவருக்கும் தெரியும் எனவும், தினகரனோ அல்லது சசிகலாவோ எதற்காக ஓரம் கட்டப்பட வேண்டும் என்ற காரணத்தை கூறியே ஆக வேண்டும் என்றும்... நாங்கள் எப்போதும் சேர்ந்தே செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.