கடந்த 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முகஸ்டாலின் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதைதுரைசாமி தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து முக.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு நீதிபதி வேணுகோபல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சைதைதுரைசாமியின், மூத்த வழக்கறிஞர் ராமனுஜன், ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகள்: 
1)எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்
2374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.
2)தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றசாட்டு உள்ளதே என்ன கூறுகிறீர்கள் ?
தேர்தல் விதிமுறை எதுவும் மீறவில்லை - ஸ்டாலின் பதில்
3)தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டது குறித்து உஙக்ளுக்கு தெரியுமா?
ஆமாம் .தெரியும் - ஸ்டாலின் 
 (தேர்தல் ஆணையத்தின் நகல் காண்பிக்கப்பட்டது )
4)ஒலிப்பெருக்கி பயன்படுத்தினீர்களா ?
அனுமதி பெற்று இருந்தேன் - ஸ்டாலின்
5)பிரச்சாரம் செய்த போது பொதுக்கூட்டம் போட்டீர்களா ?
போட்டோம்.அதற்கும் அனுமதி வாங்கியிருந்தோம். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டது எங்கு என்பது சரியாக நியாபகம் இல்லை. ஏனெனில் அது 2011 ல் நடந்தது.
6)1961 - தேர்தல் நடத்தை விதிமுறை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அதை பின்பற்றுகிறீர்கள் ?
பின்பற்றுகிறேன். - ஸ்டாலின்.
7)கொளத்தூர் தொகுதியில் எவ்வளவு மாநகராட்சி வார்டு உள்ளது.
6 வார்டுகள் - ஸ்டாலின்
அதில் 5 வார்டு திமுக உடையது. 
6வது - பகுஜன் சமாஜ்வாடி கட்சி
 8)பூத் சிலிப், போட்டோ பிரிண்ட் பண்ணி விநியோக பண்ணப்பட்டதா? 
இல்லை என ஸ்டாலின் பதில்
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதியும் ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடைப்பெற்றது. 
அதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தபட்டு வருகிறது
கொளத்தூரில் பன்னீர்செல்வம் என்ன பதவியில் உள்ளார் ? தெரியாது.
அவரை பார்த்தால் உங்களால் அடையாளம் காண்பிக்க முடியுமா ? முடியும்.
கொளத்தூரில் ஈஸ்வரி மருத்துவமனை உள்ளது தெரியுமா?
இப்போது தான் அறிகிறேன்.
அந்த மருத்துவமனையை நடத்துபவர் நடனசபாபதி.அவரை தெரியுமா ?
தெரியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.