மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம் அடைந்துள்ளார்.

மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம் அடைந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்ப மேடையில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தையும், சிங்கம் சிலையையும் சமூக விரோதிகள் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். கோழைத்தனமான இந்த ஈனச் செயல் கண்டிக்கத்தக்கது!

கொள்கை அடிப்படையில் பா.ம.க.வை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பா.ம.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அக்னிகலசம் சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலச சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்!

Scroll to load tweet…

மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.