கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத கேரளாவில் தற்போது 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பிரனாயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. மிகவிரைவில் 100 எண்ணிக்கையை தொட்டதும் கேரளாதான். ஆனால், மாநில முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உடன் 20 ஆயிரம் கோடி அளவிலான நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கினார்.மேலும், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்றடைய வழிவகை செய்தார். இதனால் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அந்த இடத்தை தனிமைப்படுத்தும் பணி எளிதாக இருந்தது.

அதேநேரத்தில் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் பரிசோதனையை அதிகப்படுத்தியது. இதன்காரணமாக சமூக பரவல் துண்டிக்கப்பட்டது. இதுவரை 502 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 462 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். ஆகையால், கடந்த 2 நாட்களா கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில், அம்மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் கோயம்பேட்டில் இருந்து கேரளாவில் வயநாடு சென்ற லாரி ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஓட்டுநரின் மனைவி, தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், லாரி கிளினர் மற்றும் அவரின் குழந்தைக்கும் தொற்று பரவியுள்ளதாக என்பது பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு வருகிறது.